என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல் ஆணையர்"
- எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
- தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிராக பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலமாக எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மீது விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. பயன்படுத்துவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.
பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது.
அரசியல் சட்டம் 324-வது பிரிவின்படி அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை அமைப்புகளை ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களைப் போக்க ஆணையம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆளும்கட்சியினர் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது என தெரிவித்துள்ளது.
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு.
- ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.
2024ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும்.
தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
பொன்முடி, சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதால், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது.
வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்புள்ளது. வயதானவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம். 12டி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும்.
இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம். ஆனால், வாக்கு சேகரிக்க கூடாது.
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. அதனால், ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம்.
அரசாணை எதுவும் இனிமேல் வெளியிட கூடாது.
பொன்முடி பதவி ஏற்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.
அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரே கட்டமாக 175 தொகுதிகள் கொண்ட ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.
ஒடிசா மாநிலத்தில் 4 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ம் தேதி 28 தொகுதிகளும், மே 20-ம் தேதி 35 தொகுதிகளுக்கும், மே 25-ம் தேதி 42 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ம் தேதி மீதமுள்ள 42 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் ஜூன் 4 -ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி இக்குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்
- புதிய மசோதாவின்படி, இக்குழுவில் ஒரு கேபினெட் அமைச்சர், பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்
இந்தியாவின் அரசியலமைப்பின்படி நிர்வாகம் (Executive), பாராளுமன்றம் (Legislature) மற்றும் நீதித்துறை (Judiciary) மூன்றும் முக்கியமான அங்கங்கள். அவ்வப்போது இவற்றிற்கிடையே கருத்து வேறுபாடுகள் உருவாவதுண்டு.
அத்தகைய ஒரு சூழ்நிலையை தோற்றுவிக்க கூடிய ஒரு சட்டத்திற்கான மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர மாநில தேர்தல் ஆணையர்கள் ஆகியோரின் நியமனம், சேவைக்கான நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம் சம்பந்தமான ஒரு புதிய மசோதா இன்று மாநிலங்களைவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்படி பிரதமர், எதிர்கட்சி தலைவர், மற்றும் பிரதமர் பரிந்துரைக்கும் ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் ஆகிய மூவரை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இதற்கு பிரதமர் தலைவராக இருப்பார். இக்குழு பரிந்துரைக்கும் நபர்களை இந்திய ஜனாதிபதி தலைமை தேர்தல் ஆணையர்களாகவும், மாநில தேர்தல் ஆணையர்களாகவும் நியமனம் செய்வார்.
ஆனால் இது சம்பந்தமாக கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது.
அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி அதன் பரிந்துரைகளின்படி ஜனாதிபதி நியமனங்களை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. பாராளுமன்றம் இந்த நியமனங்களில் ஒரு சட்டம் கொண்டு வரும் வரை இந்த முறையே தொடர வேண்டும் எனவும் அது தெரிவித்திருந்தது.
தற்போதைய இந்த மசோதா, அந்த தீர்ப்பை நீர்த்து போக செய்யும் விதமாக உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிபதிகளின் நியமனத்திலிருந்து புதுடெல்லிக்கான சேவைகள் சட்டம் வரை நீதித்துறைக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் பின்னணியில் இந்த புதிய மசோதா அத்தகைய வேறுபாடுகளை தீவிரமடைய செய்யலாம் என அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
- மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சக செயலாளராக பதவி வகித்து வந்தார்.
- அண்மையில் ஓய்வு பெற்ற நிலையில் தேர்தல் ஆணையராக நியமனம்.
குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலை தொடர்ந்து கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. அவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். மேலும் மற்றொரு தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய தேர்தல்ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆன, கோயல், மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சக செயலாளராக பதவி வகித்து வந்தார். விருப்ப ஓய்வின் கீழ் அண்மையில் அவர் ஓய்வு பெற்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்